திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை- நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த முச்சக்கர வண்டி
ஒன்றும் பட்டா ரக வாகனமும் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் நிலாவெளி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை
வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.
