யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் சில நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் இதனை கூறியுள்ளார்.
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என அவர் கூறியுள்ளார்.
பிமல் ரத்நாயக்க
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் நேற்று நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் உள்ள விடயங்களை கருத்தில் கொண்டும், இனவெறி அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்கவும் சபாநாயகர் சில நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் எதிர்பார்ப்பதாகக் நளிந்த கூறியுள்ளார்.
