Home இலங்கை சமூகம் ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் மீண்டும் பரபரப்பு சம்பவம்

ஆடையின்றி சைக்கிள் ஓட்டிய நபர்! இலங்கையில் மீண்டும் பரபரப்பு சம்பவம்

0

கந்தானை நகரின் நடுவில் நபர் ஒருவர் ஆடையின்றி சைக்கிள் ஓட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் பின்னால் பயணித்த வாகனத்தின் டேஷ்போர்ட் கமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தனது சைக்கிள் கைப்பிடியில் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு அமைதியாக சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்றுள்ளார்.

மதிப்பாய்வு 

பகல்வேளையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து பொலிஸார் காணொளியை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version