Home இலங்கை அரசியல் ஜேவிபி காடைத்தனமான கட்சி என்ற வார்த்தையால் மானிப்பாய் பிரதேச சபையில் கடும் சண்டை

ஜேவிபி காடைத்தனமான கட்சி என்ற வார்த்தையால் மானிப்பாய் பிரதேச சபையில் கடும் சண்டை

0

மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நேற்றையதினம் காலை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. 

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜேவிபி காடைத்தனமான
கட்சி என கூறினார்.

கூச்சலிட்டு சண்டை

உடனடியாக தேசிய மக்கள் சக்தியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த
வார்த்தை பிரயோகத்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார்.

இதன்போது சபையில்
சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தார்.

NO COMMENTS

Exit mobile version