2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகி இருந்தன.
இதற்கமைய, யாழ் மானிப்பாய் மகளிர் கல்லூரியின் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர்.
அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், பன்னிரண்டு மாணவர்கள் 8A சித்திகளையும், பெற்றுள்ளனர்.
கணித பாடம்
அதேவேளை, இந்த பாடசாலையில், கணித பாடத்தில் 30 மாணவர்கள் A தர சித்திகளை பெற்றுள்ளனர்.