எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலையை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (18.11.2025) ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலையில் விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டப்படுவதை ஒரு மதத் திணிப்பாகவே நாம் கருதுகின்றோம்.
இந்த விடயத்தில் அரசாங்கம், இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதை நாம் அவதானிக்கின்றோம்.
முதல் நாள் இரவு புத்தர் சிலையை அகற்றுவதாக உறுதியளித்துவிட்டு, மறுநாள் நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகளின் கூச்சல்களுக்கு அஞ்சி அது தாற்காலிகமாகவே அகற்றப்பட்டது என அரசாங்கம் தெரிவித்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
