Home இலங்கை அரசியல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின்(Manmohan Singh) மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனது சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் இந்தியக் குடியரசுக்கும், மன்மோகன் சிங்கின் குடும்பத்தாருக்கும், தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன் சிங் மறைவு

தொலைநோக்கு கொண்ட தலைவரான மன்மோகன் சிங்கின் வழிகாட்டல் இந்தியாவிற்குள் மாத்திரம் மட்டுப்படவில்லை.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக அவர் செயல்படுத்திய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு செயல்திட்டம் போன்ற மாற்றத்துக்கான திட்டங்கள் என்பன சமத்துவம், தலையீடு தொடர்பிலான அவரது உறுதியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன.

சர்வதேச ஒத்துழைப்புக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய காலாநிதி மன்மோகன் சிங், நீண்டகால கூட்டுறவு கூட்டணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதுடன் BRICS போன்ற அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

 ஜனாதிபதி இரங்கல்

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலம் அவரது சிறந்த இராஜதந்திரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது தன்னடக்கம், அறிவாற்றல் மற்றும் அரச சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியன நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நிலையான முன்மாதிரியாகவும் ஊக்குவிப்பாகவும் அமையும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்றையதினம்(26) தனது 92ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version