Home இலங்கை அரசியல் மன்னார்-பூநகரி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

மன்னார்-பூநகரி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0

மன்னார்(Mannar), பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள்
தாக்கல் இன்றையதினம்(24) ஆரம்பமாகின்றது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் வியாழக்கிழமை
நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில்,
336 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் கடந்த வியாழக்கிழமை
நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில், மன்னார், பூநகரி,
தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நாளை(25)  வரை கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version