Home இலங்கை அரசியல் தேரர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கல்! பல மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் முன்னாள் அமைச்சர்

தேரர் ஒருவருக்கு ஏற்பட்ட சிக்கல்! பல மில்லியன் ரூபா நட்டஈடு கோரும் முன்னாள் அமைச்சர்

0

பொய்யான ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்ட ஆனந்த சாகர தேரருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி, முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் பொய்யான அறிக்கைகள் மற்றும் அவதூறு அறிக்கைகளை வெளியிட்டதற்கு எதிராக பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக தனது சட்டத்தரணிகள் ஊடாக, தேரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பொய்யான அறிக்கைகள்

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு அவதூறு செய்யும் செயலுக்கு எதிராக ஐநூறு மில்லியன் ரூபா நட்டஈட்டை 14 நாட்களுக்குள் வழங்குமாறு மனுஷ நாணயக்கார தனது சட்டத்தரணிகள் ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார்.

மனுஷ நாணயக்காரவின் சட்டத்தரணிகளின் வாதத்தின்படி, முன்னாள் அமைச்சரின் உறவினரின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பியதாகவும் அவர்கள் சம்பாதித்ததாகவும் ஆனந்த சாகர தெரிவித்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுஷ நாணயக்காரவின் பெயரை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டு வேண்டுமென்றே அவதூறு செய்யும் நோக்கில் ஆனந்த சாகர தேரர் அறிக்கைகளை வெளியிட்டதாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

NO COMMENTS

Exit mobile version