Home இலங்கை அரசியல் பெருந்தோட்ட மக்களுக்காக குரல் கொடுத்த தொண்டமான்கள்: மனுஷ நாணயக்கார புகழாரம்

பெருந்தோட்ட மக்களுக்காக குரல் கொடுத்த தொண்டமான்கள்: மனுஷ நாணயக்கார புகழாரம்

0

Courtesy: Ministry of Labour & foreign Emp

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு தொண்டமான்கள் தான் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நுவரெலியா – கொட்டக்கலையில் இன்று (01.05.2024) நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“தொண்டமான்கள் தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து அரசியலை ஆரம்பித்து இன்று நாட்டின் தொழில் அமைச்சரானேன்.

மேதினக் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறிய சரத் பொன்சேகா

ஜனாதிபதியின் தீர்மானம்

உங்களிடமிருந்தும், உங்கள் தலைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்ட அரசியலால் தான் தற்போது தொழில் அமைச்சராக உழைக்கும் மக்களுக்காக உழைக்க முடிந்துள்ளது.

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமானுடன் (Jeevan Thondaman) ஒரு அமைச்சராக இணைந்து நாட்டை வீழ்ந்த இடத்திலிருந்து முன்னேற்றி மக்கள் வரிசையில் நிற்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை மற்றும் காணி உரிமைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளார். நிச்சயமாக நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்கு நிறைவேற்றித் தருவோம் ” என கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்து கொள்ள கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version