Home இலங்கை அரசியல் ரணிலை பழிவாங்க எண்ணும் பிரபல பெண்மணி! வாக்குமூலம் வழங்கிய பின்னர் மனுஷ கூறிய கதை

ரணிலை பழிவாங்க எண்ணும் பிரபல பெண்மணி! வாக்குமூலம் வழங்கிய பின்னர் மனுஷ கூறிய கதை

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், என்னையும் பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாக  தெரிகின்றது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இப்படி, ரணில் விக்ரமசிங்கவையும் என்னையும்  பழிவாங்கும் எண்ணம்  ஒரு பிரபல பெண்மணிக்கு  உள்ளதாக உணர்கின்றேன்.   ஆனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். 

தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கலாம்..

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்றையதினம் பிரசன்னமாகி வாக்குமூலம் வழங்கியதன் பின்னர்   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நான் மோசடியில் ஈடுபட்டிருந்தால் எனக்கெதிராக வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அப்படியொன்று நடக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  

தொடர்ந்து பேசிய அவர்,

நான் நேற்றையதினம் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  இன்றையதினம் முன்னிலையாவதாக தெரிவித்திருந்தேன்.

எனினும்,   நேற்று மாலையில், என்னுடைய மனைவி தனியாக இருந்த சமயம் வீட்டிற்கு வந்த சிலர் என்னை தேடியதோடு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவை என்னை பழிவாங்கும் நோக்கில் செய்ததாகவே தோன்றுகிறது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய சந்தர்ப்பத்தில் இளைஞர்களை தொழில் வாய்ப்புக்காக இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பிய செயற்பாட்டில் பண மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து என்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

நான் அது தொடர்பான சகல ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன். அச்செயற்பாட்டில் பின்பற்றப்பட்ட முறைமையில் தவறு நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்படி ஒன்றும் நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version