Home இலங்கை அரசியல் அரசாங்கம் என்னை பற்றி மட்டும் கனவு காண்கின்றது

அரசாங்கம் என்னை பற்றி மட்டும் கனவு காண்கின்றது

0

 அரசாங்கம் என்னைப் பற்றி மட்டும் கனவு காண்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்று வரும் கைதுகள் மற்றும் போதைப்பொருள் மீட்பு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைதுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்சவின் பெயர் அடிபடுகின்றதே என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது அரசாங்கம் என்னைப் பற்றிய கனவில் மட்டுமே இருக்கின்றது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்த அரசாங்கம் மக்களின் கனவுகளை சிதைத்து விட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உண்மையில் அரசாங்கம் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version