Home இலங்கை அரசியல் ரணில் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அநுர அரசாங்கத்தில் ரத்து

ரணில் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அநுர அரசாங்கத்தில் ரத்து

0

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி  அமைச்சரவை அங்கீகாரத்திற்கமைய ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ” வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் விவகார செயலகம்“, “பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான மக்கள் சபை முறையை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சபை செயலகம்“, மற்றும் ”விவசாய நவீனமயப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம்” ஆகியவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தெளிவுபடுத்தல் 

அதற்காக ஒப்பந்த அடிப்படையில் அலுவலர்கள் அல்லது ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்குறித்த அலுவலகங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் கருமங்களை தொடர்புடைய அமைச்சுகள் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கான இயலுமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அல்லது ஆலோசகர்களின் சேவையை 2024-09-30 திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் முடிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமைய இந்த விடயம் குறித்து ஜனாதிபதி அமைச்சரவையை தெளிவுபடுத்திய பின்னர் அமைச்சரவை அதற்கான ஒப்புதலை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

Source: https://ibctamil.com/article/many-schemes-of-ranil-govt-canceled-in-anura-govt-1728375087

NO COMMENTS

Exit mobile version