Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் ஜனாதிபதி வேட்பாளரின் படம் பொறித்த தீப்பெட்டிகள் விநியோகம்

நுவரெலியாவில் ஜனாதிபதி வேட்பாளரின் படம் பொறித்த தீப்பெட்டிகள் விநியோகம்

0

Courtesy: Sivaa Mayuri

நுவரெலியாவில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் படம் மற்றும் தேர்தல் சின்னம் அடங்கிய தீப்பெட்டிகளை விநியோகித்த குழு ஒன்று குறித்து முறையிடப்பட்டுள்ளது.

நுவரெலியா பகுதியில் இருந்து இந்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு மையமான பெப்ரல் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆணையகத்தின் தீர்மானம்

எனினும், இந்த முறைப்பாடு குறித்து தேர்தல் ஆணையகத்தின் தீர்மானம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/match-boxes-with-image-of-presidential-candidate-1726597956

NO COMMENTS

Exit mobile version