Home இலங்கை குற்றம் மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கோரச் சம்பவம்

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்! இலங்கையில் நடந்த கோரச் சம்பவம்

0

மெதகம பகுதியில், கணவன் ஒருவரால் மனைவி சுட்டுப் படுகொலை  செய்யப்பட்டுள்ளார்.

மெதகம – பலகசர பகுதியில் நேற்று மாலை(14) இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குடும்ப தராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொலிஸார் விசாரணை  

பலகசர வீதிக்கு அருகே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்திருந்த பெண்ணை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பு அறிவித்துள்ளது. 

மெதகம – மக்கந்தவின்ன பகுதியில் வசித்து வந்த 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கணவனால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

பெண்ணின் சடலம்  தற்போது மெதகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று்ள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். 

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

 

Source: https://tamilwin.com/article/medagama-gun-fire-1749953769

NO COMMENTS

Exit mobile version