Home முக்கியச் செய்திகள் போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

போராட்டத்தில் குதிக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

0

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers’ Association) தெரிவித்துள்ளது.

அவர் உடனடியாக பதவி நீக்கப்படாவிட்டால் நாளை (23) காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கண் வைத்தியசாலை

குறித்த வைத்தியரின் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகள் காரணமாக அவரை பதவி நீக்குமாறு கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளைச் சுமுகமாக முன்கொண்டு செல்வதற்காக, பொருத்தமான ஒருவர் அங்குப் பணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Source: https://ibctamil.com/article/medical-officers-association-union-action-1721667967?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version