மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
டி-56 ரக துப்பாக்கியொன்று, மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள்,வாள்,கத்தி உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மினுவாங்கொடை, மருத்துவமனை வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மினுவாங்கொடைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது அவை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
