Home இலங்கை அரசியல் கிழக்கு ஆளுநருக்கும் சிறீதரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு ஆளுநருக்கும் சிறீதரன் எம்.பிக்கும் இடையில் சந்திப்பு

0

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது கிழக்கு மாகாண ஆளுநரின் மாளிகையில் நேற்று(19.07.2024) நடைபெற்றுள்ளது.

தற்போதைய பிரச்சினைகள்

இதன்போது, தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்டத் தமிழர்களுக்கும் வடக்கு மற்றும் கிழக்குத்
தமிழர்களுக்கும் இடையில் வலுவான நட்புறவை வளர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/meeting-between-east-governor-and-sritharan-mp-1721484295

NO COMMENTS

Exit mobile version