Home இலங்கை அரசியல் இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு!

இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) விசேட மாநாடு ஒன்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாடானது, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் (Sirikotha) இன்று (25) நடைபெறவுள்ளது.

அரசியல் கட்சிகள்

இதன்போது, இலங்கையின் (Sri Lanka) எதிர்காலத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றியை உறுதிப்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில் பங்கேற்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/unp-special-convention-today-1724560899

NO COMMENTS

Exit mobile version