Home அமெரிக்கா பைடனின் மகனிடம் நட்டஈடு கோரும் மெலனியா ட்ரம்ப்

பைடனின் மகனிடம் நட்டஈடு கோரும் மெலனியா ட்ரம்ப்

0

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் மீது டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ட்ரம்பின் மனைவிக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1 பில்லியன் டொலர்கள் 

அத்துடன் 1 பில்லியன் டொலர்களை மெலனியா ட்ரம்ப் நட்டஈடாக கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே, ட்ரம்புக்கு மெலனியா ட்ரம்ப்பை அறிமுகம் செய்து வைத்தார் என பொய்யான கருத்தை பகிர்ந்துள்ளமையால் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version