Home இலங்கை அரசியல் தேசியப்பட்டியலுக்குள் உள்ளீர்க்கப்படும் உறுப்பினர்களை தீர்மானிப்பதில் கட்சிகள் தீவிரம்

தேசியப்பட்டியலுக்குள் உள்ளீர்க்கப்படும் உறுப்பினர்களை தீர்மானிப்பதில் கட்சிகள் தீவிரம்

0

Courtesy: Sivaa Mayuri

தேசிய மக்களின் சக்தியின் 18 தேசிய பட்டியல் இடங்களை நிரப்ப, மூத்த கட்சி தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு தற்காலிக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவை நாளைய தினம் தேசிய பட்டியலுக்கான பெயர்களை இறுதிச்செய்யவுள்ளன.

தேசிய மக்கள் சக்தி, ஏற்கனவே தேர்தல் ஆணையகத்திடம் ஒப்படைத்த 29 பட்டியலில் இருந்து 18 பெயர்களை அறிவித்துள்ளது.

இறுதி பட்டியல் 

எனினும் மூத்த அதிகாரிகள், இறுதி பட்டியலை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இந்த 18 பேர் பட்டியலில் ராமலிங்கம் சந்திரசேகர், பிமல் ரட்நாயக்க,உட்பட்டவர்கள் அடங்குகின்றனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து பேரின் பெயர்களை வழங்கவேண்டியுள்ளது
இதற்கிடையில், தேசிய ஜனநாயக முன்னணி, நாளை பிற்பகல் 3 மணியளவில், இரண்டு தேசிய பட்டியல் இடங்களை தீர்மானிப்பதற்காக கூடவுள்ளது.

முன்னதாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியலின் மூலமாக பிரவேசிக்க மறுத்துவிட்டார்.

இலங்கை தமிழரசுக்கட்சியும் தேசிய பட்டியலின் ஒருவரை இன்று பெயரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நமல் ராஜபக்ச, கட்சிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் வாய்ப்பின் மூலம், நாடாளுமன்றம் செல்லவுள்ளார்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் சர்வஜன பலய கட்சிகளுக்கும் தலா ஒரு தேசிய பட்டியல் இடம் கிடைத்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version