சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் பிரதான கட்சிகளில் பதவி வகிக்கும் சுமார் 15 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்கா அதிபர் ரணிலுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள அதேவேளை, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்று சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளது.
தேர்தல்
மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, இந்த குழுவினர் ஏற்கனவே இது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.