Home முக்கியச் செய்திகள் யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்

0

யாழில் (Jaffna) போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (14.06.2025) இடம்பெற்றுள்ளது.

கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் போதைமாத்திரைகளை விற்பனை செய்ய வந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபரை யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில்
முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version