Home இலங்கை அரசியல் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்

விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும்

0

 விலை ஏற்ற இறக்கங்களுக்கு மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியின் அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் அல்லது வேறு எந்த ஒரு பொருள் அல்லது சேவைக்கு செலவு ஏற்படும் எனவும் இந்த செலவுகளின் அடிப்படையில் அவற்றின் கட்டணம் அல்லது விலைகள் மாறுபடும் எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டி உள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது மின்சார கட்டணத்தை குறைத்ததாகவும் தற்பொழுது கட்டணங்களை உயர்த்த நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த விடயத்திற்கு பழக வேண்டும் எனவும் விலை அதிகரிப்பு மற்றும் விலை குறைப்பு இரண்டையும் தாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிழையான ஓர் அரசியல் கலாசாரம் நிலவி வருவதாகவும் விலை குறைக்கப்பட்ட போது அது குறித்து மார்தட்டிக் கொண்டவர்கள் விலை அதிகரிக்கும் ஒளிந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டையும் செய்யக்கூடாது என அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version