Home அமெரிக்கா ட்ரம்ப் மீதான சமூகவலைத்தள கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

ட்ரம்ப் மீதான சமூகவலைத்தள கட்டுப்பாடுகளை நீக்கிய மெட்டா நிறுவனம்

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை (Donald Trump) மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது கருத்து சுதந்திரத்தை மதித்து அவரது சமூக வலைத்தளங்கள்  மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் வெறுப்பு பேச்சு, கலவரத்தைத் தூண்டும் பதிவு உள்ளிட்டவற்றிற்கு எதிரான விதிமுறைகள் அவரது கணக்குகளுக்கு பொருந்தும் என்றும் மெட்டா சுட்டிக்காட்டியுள்ளது.  

வெள்ளை மாளிகை கலவரம்

அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜோ பைடனின் ஆளும் ஜனநாயக காட்சியை எதிர்த்து குடியரசுக் காட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்.

கடந்த 2017 தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியான ட்ரம்ப்  2021 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதால் ,அவரது தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் கலவரங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்ததால், 2021 இல் வெள்ளை மாளிகை கலவரம் நடந்த அடுத்த நாளே ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மெட்டா நிறுவனத்தால் முடக்கப்பட்டன.

இதனையடுத்து கடந்த 2023 பெப்ரவரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவரது கணக்குகள் மீதான தடைகள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version