Home முக்கியச் செய்திகள் 93 நாடுகளுக்கு இலவச விசா அனுமதியளித்த வெளிநாடு

93 நாடுகளுக்கு இலவச விசா அனுமதியளித்த வெளிநாடு

0

93 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஜூலை 15 ஆம் திகதி முதல் விசா இல்லாமல் நுழைய தாய்லாந்து (Thailand) அனுமதி அளித்துள்ளது.

குறித்த தகவலை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் நேற்று (13) வெளியிட்டுள்ளது.

இதன் படி, தற்போது 57 நாடுகளுக்கு மட்டுமே தாய்லாந்தில் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 93 நாடுகளுக்கு நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கான காரணம்

தாய்லாந்தின் சுற்றுலாத்துறை வருவாயை அதிகரிக்கும் வகையில் நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, நாட்டிற்குள் பிரவேசிக்கும் நபர்கள் 60 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை வளர்ச்சி

அத்துடன், இந்த ஆண்டு (2024) ஜூலை 07 ஆம் திகதி வரை தாய்லாந்திற்கு வந்த வெளிநாட்டு வருகைகள் 2023 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்து 35 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2024 இல் இதுவரை சீனா, மலேசியா மற்றும் இந்தியா ஆகியவை தாய்லாந்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய பங்காற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version