Home முக்கியச் செய்திகள் மித்தெனிய முக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் விமான நிலையத்தில் அதிரடி கைது

மித்தெனிய முக்கொலை : மற்றுமொரு சந்தேக நபர் விமான நிலையத்தில் அதிரடி கைது

0

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் (25) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூவர் உயிரிழப்பு 

கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜ்ஜா எனப்படும் அருண விதானகமகே மற்றும் அவரது இரு பிள்ளைகள் உயிரிழந்தனர்.

உந்துருளியில் வந்தவர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது உந்துருளியை செலுத்தியதாகத் தெரிவிக்கப்படும் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version