Home இலங்கை கல்வி ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

0

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2025) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் (Grade 5 scholaship exam) மாற்றம்
ஏற்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 

மாணவர்கள் பாரிய அழுத்தங்கள்

ஆனால் அது குறித்து தற்போது எதுவும் குறிப்பிடப்படவில்லை. பிள்ளைகளின் இளம்பராயத்தை அனுபவிப்பதற்கு
புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்கள் தடையாக காணப்படுகிறது.

ஆகவே இவ் விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என ஹர்ஷன ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டதாக காணப்படுகிறது. 

மேலும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இந்த புலமைபரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டுள்ளார்கள்.
இதனால் மாணவர்கள் பாரிய அழுத்தங்களுக்கு
உள்ளாகுகிறார்கள். இது குறித்து அரசாங்கம் விசேட கவனம்
செலுத்த வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/7YPxHbpZ-AE

NO COMMENTS

Exit mobile version