Home இலங்கை அரசியல் வவுனதீவு படுகொலையில் அஜந்தன் கைது: நாடாளுமன்றில் அம்பலமான சூழ்ச்சி விபரங்கள்

வவுனதீவு படுகொலையில் அஜந்தன் கைது: நாடாளுமன்றில் அம்பலமான சூழ்ச்சி விபரங்கள்

0

வவுனதீவு படுகொலையில் முன்னாள் விடுதலை புலிகள் போராளியான அஜந்தனின் கைது தொடர்பில், இடம்பெற்ற சூழ்ச்சிகளை பொதுபாதுகாப்பு அமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் நடந்த முக்கிய தாக்குதல்களான வவுனதீவு பகுதியில் இடம்பெற்ற படுகொலையை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

 நடைபெற்ற விசாரணை

வவுனதீவு பகுதியில் காவலரணுக்கு அருகில் இருந்த இரு காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதோடு கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரு காவல்துறையினர் கொலை தொடர்பில் நடைபெற்ற விசாரணைகளின் போது இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என முன்னாள் விடுதலை புலிகள் போராளியான அஜந்தன் கைது செய்யப்படுகின்றார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணை

அத்தோடு அஜந்தன் பயன்படுத்திய் மோட்டார் சைக்கிள் மற்றும் அவர் அணிந்திருந்த உடை போன்றவற்றை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்த வடிகானில் போட்டு விசாரணைகளை நடத்தும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நம்பி, பொய் சாட்களை உருவாக்கி விசாரணையை திசை திருப்புவதற்கும் எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் இப்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பில் புலனாய்வு அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், வவுனதீவு கொலை தொடர்பில் அன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பொய்யானதாகவும் சோடிக்கப்பட்டதாகவும் இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version