Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்ட ஆளும் தரப்பு அமைச்சரின் பட்டம்!

0

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேனவின்(Chrishantha Abeysena) பெயருக்கு முன்னால் இடம்பெற்ற பேராசிரியர் என்ற பட்டம் நாடாளுமன்ற வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

குறித்த நீக்கம் நேற்று (21.) இடம்பெற்றுள்ளது.

 அமைச்சரின் தனிப்பட்ட வேண்டுகோளின் பேரில் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

சிறப்பு விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையில், அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, முன்னர் பேராசிரியர் பதவியை வகித்திருந்தாலும், தற்போது பல்கலைக்கழக சேவையில் இல்லாததால், அந்தப் பட்டத்தைப் பயன்படுத்துவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உண்மைகளை விளக்கிய அபேசேன, “நாடாளுமன்றத்தின் ஹன்சாட் பதிவுகளில் கூட பேராசிரியர் என்ற பட்டம் தனது பெயருடன் குறிப்பிடப்படவில்லை என்றும், எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணத்திலும் அந்தப் பட்டத்தைப் பயன்படுத்துவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

நீதி அமைச்சர்

முன்னதாக நாடாளுமன்ற வலைத்தளத்தில் இருந்து நீதி அமைச்சர், வழக்கறிஞர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன் வைத்தியர் என்ற பட்டம் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும், பின்னர் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் அது நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் நம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், மேலும், நாடாளுமன்ற வலைத்தளத்தை நிர்வகிக்கும்அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இரண்டு ஊழியர்களிடம் விசாரணைகள் சமீபத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version