Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியுடன் விவாதிக்க தயார்: கஞ்சன விஜேசேகர பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியுடன் விவாதிக்க தயார்: கஞ்சன விஜேசேகர பகிரங்கம்

0

மின்சாரம் மற்றும் எரிசக்தி, மின் கட்டணம் மற்றும் கொள்வனவு செயன்முறைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியுடன் விவாதிக்க தாம் தயார் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதை தேசிய மக்கள் சக்தி, அரசியல் பிரச்சினைகளாக மாற்றியதைத் தொடர்ந்து நாட்டில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கொழும்பில் (Colombo) நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக நாட்டில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு ஜேவிபி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் தடையாக உள்ளன.

குறிப்பாக, இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் நுகர்வோருக்கான கட்டணத்தை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.

அத்துடன், இந்த மாதங்களில் நாட்டில் கனமழை பெய்து வருவதால்,  ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் அடுத்த திருத்தத்தின் போது மின் கட்டணத்தை மேலும் குறைக்க எதிர்பார்க்கின்றோம்.“ என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version