Home சினிமா நடிகை மிர்னாலினி ரவி வாங்கிய ஸ்பெஷல் கார்.. விலை இவ்வளவா?

நடிகை மிர்னாலினி ரவி வாங்கிய ஸ்பெஷல் கார்.. விலை இவ்வளவா?

0

நடிகை மிர்னாலினி ரவி தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவரை கடைசியாக விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தில் ஹீரோயினாக பார்த்திருப்போம்.

டப்ஸ்மாஷ் மூலமாக பிரபலம் ஆகி ஹீரோயினாக வலம் வரும் அவருக்கு இன்ஸ்டாவில் 1.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

புது கார்

இந்நிலையில் மிர்னாலினி ரவி சொந்தமாக புது கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். Mahindra BE 6 Batman Edition காரை தான் அவர் வாங்கி இருக்கிறார்.

இந்த லிமிடட் எடிஷன் கார் பேட்மேன் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக மகேந்திரா நிறுவனத்தால் செய்யப்பட்டது. இது போல 999 கார்கள் மட்டுமே அந்த நிறுவனம் உருவாக்கி விற்பனை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விலை சுமார் 33 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version