அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் (SpaceX) இன்று அதன் ஃபால்கன்–9 (Falcon 9) ரொக்கெட்டை பயன்படுத்தி மேலும் 29 ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள்களை புவியைச் சுற்றும் குறைந்த உயரப் புவிச் சுற்றுவட்டப் பாதையில் (Low-Earth Orbit) வெற்றிகரமாக ஏவியுள்ளது.
குறித்த நிறுவனம், அந்த ரொக்கெட் பயன்படுத்திய முதல் கட்ட(First-stage booster) இயந்திரத்தின் ஐந்தாவது பறப்பாகும்.
இந்த ஏவுதல் அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப் படை நிலையத்திலிருந்து (Cape Canaveral Space Force Station) நடைபெற்றுள்ளது.
ஸ்பேஸ்.எக்ஸின் திட்டம்
2002ஆம் ஆண்டு தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) நிறுவிய ஸ்பேஸ்.எக்ஸ், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ரொக்கெட்டுகளை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது.
Image Credit: Aerospace America – AIAA
இவை விண்வெளிப் பயணத்திற்குப் பின் பாதுகாப்பாக பூமியில் தரையிறங்கி, மறுபடியும் பறக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மனித விண்வெளிப் பயணத்தை மேம்படுத்தி, நீண்டகாலத்தில் செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் இலக்கை ஸ்பேஸ்.எக்ஸ் கொண்டு செயல்பட்டு வருகிறது.
சாதனை
2020ஆம் ஆண்டில், தனியார் நிறுவனமாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (International Space Station) அனுப்பிய முதலாவது நிறுவனம் என்ற சாதனையை ஸ்பேஸ்.எக்ஸ் பெற்றது.
Image Credit: VietnamFinance
தற்போது, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் தகவலின்படி, ஸ்பேஸ்.எக்ஸ் மொத்தம் 565 ஏவுதல்களை நிறைவேற்றியுள்ளது, அதில் 525 வெற்றிகரமான தரையிறக்கங்கள் மற்றும் 490 மறுபயன்பாட்டு ராக்கெட் பறப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஸ்பேஸ்.எக்ஸ் உருவாக்கிய ஸ்டார்லிங்க் திட்டம் உலகளாவிய அளவில், குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும், அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது.
