Home இலங்கை அரசியல் தவறான செயற்பாடு: 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஏழு எம்.பிக்கள்

தவறான செயற்பாடு: 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஏழு எம்.பிக்கள்

0

கடந்த ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற சேவைகள் 2023 ஆம் ஆண்டுக்குள் அவர்களின் தவறான நடத்தை காரணமாக இடைநிறுத்தப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியின் பின்னர் இரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களான நளின் பண்டார ஜயமஹா(Nalin Bandara Jayamaha) மற்றும் வசந்த யாப்பா பண்டார(Wasantha Yapa Bandara )அமர்வுகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இரண்டு எம்.பி.க்கள் இடைநிறுத்தம்

பிரதி சபாநாயகர் அமர்ந்திருந்த மேசையை முட்டிக்கொண்டு சபாநாயகர் அஜித் ராஜபக்சவை(Ajith Rajapaksa) நோக்கி விரைந்த இரண்டு எம்.பி.க்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

மற்றுமொரு சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் தண்டாயுதத்தை பிடித்ததற்காக நிலையியற் கட்டளை 77(3) இன் படி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும(Ajith Mannapperuma) நான்கு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்ட எம்.பிக்கள்

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் தகராறு செய்ததற்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே( Diana Gamage), ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன(Rohana Bandara) பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா (Sujith Sanjaya Perera )ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டனர்.

மற்றொரு சம்பவத்தில், தங்கக் கடத்தல் வழக்கில் அலி சப்ரி ரஹீமின்(Ali Sabri Raheem) நாடாளுமன்ற வருகை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டது.

நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்சவினால்(Chamal Rajapaksa) 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இடைநிறுத்தம் விதிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version