யாழில் (Jaffna) காணாமல் போன கடற்றொழிலாளர்கள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (05) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து 40 மற்றும் 50 வயதுடைய இருவர் நேற்றையதினம் (05) கடற்றொழிலுக்கு படகு ஒன்றில்
சென்றுள்ளனர்.
தேடும் நடவடிக்கை
இவ்வாறு தொழிலுக்கு சென்ற இருவரும் திரும்பி வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகளில் கடற்றொழிலாளர்களும் மற்றும் கடற்படையினரும் இணைந்து
ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, படகு பழுதடைந்த நிலையில் இரண்டு கடற்றொழிலாளர்களும் கடலில்
தத்தளித்துள்ளனர்.
இதையடுத்து, தேடிச் சென்ற கடற்றொழிலாளர்களால் பாதுகாப்பாக குறித்த இருவரும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
