பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு
சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு
120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன
போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு
உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற
தகுதியுடையவர்களாவர்.
10 நிமிடங்களுக்குள்
இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக
சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து
திணைக்களம் தெரிவித்துள்ளது.
