சி.வி.கே சிவஞானம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் காட்டும் படத்தை பார்த்தால் தந்தை செல்வாவையே அவர்கள் தான் தமிழரசுக் கட்சியில் சேர்த்து விட்டவர்கள் போல் உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M K. சிவாஜிலிங்கம் (M. K. Shivajilingam) கிண்டலடித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு சி.வி.கே சிவஞானம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராகவும் சுமந்திரன் 2010 ஆம் ஆண்டு தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் தமிழரசுக்கட்சி 5000 ரூபா காசுக்கு சாராய போத்தல்களை பறக்க விட்டது என்று கூறி கருத்து திரிபுபடுத்தப்பட்டுஉள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்,
https://www.youtube.com/embed/D5fYtl8tvvY
