Home உலகம் அதானிக்கு 33000 கோடி ரூபாவை தாரைவார்த்த மோடி அரசாங்கம்! கசிந்த விசாரணை அறிக்கை

அதானிக்கு 33000 கோடி ரூபாவை தாரைவார்த்த மோடி அரசாங்கம்! கசிந்த விசாரணை அறிக்கை

0

இந்தியாவின் முன்னணி நிறுவனமான அதானி குழுமத்துக்கு முறைகேடாக நிதி வழங்க அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டொலர் (.33,000 கோடி இந்திய மதிப்பு) முறைகேடாக நிதி வழங்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் பத்திரிகை ஒன்று குற்றம்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றையும் குறித்த பத்திரிகை ஊடகம் வெளியிட்டுள்ளது.

பில்லியன் டொலர் லஞ்சம் மற்றும் மோசடி

2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை அண்மையில் இந்திய மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியம் நிராகரித்துள்ளது.

மேலும் அதானியும் அவரது சகாக்களும் பல பில்லியன் டொலர் லஞ்சம் மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது.

இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்குகிறது.

இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து இரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக குறித்த ஊடகம் கூறியுள்ளது.

முதலீட்டு வியூகம்

இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை மேற்கண்ட ஊடகம் விளக்கியுள்ளது.

நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனதில் வைப்பிலிடப்பட்ட பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version