Home இலங்கை அரசியல் தமிழ்த் தேசிய தலைவர்களிடம் சம்பந்தனையும் மாவையையும் நினைவுகூர்ந்த மோடி

தமிழ்த் தேசிய தலைவர்களிடம் சம்பந்தனையும் மாவையையும் நினைவுகூர்ந்த மோடி

0

இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  

இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம், பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் சமூகத் தலைவர்கள்

இது தொடர்பில் மோடி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,

“இலங்கைத் தமிழ் சமூகத் தலைவர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

மதிப்பிற்குரிய தமிழ்த் தலைவர்களான. ஆர். சம்பந்தன் மற்றும்  மாவை சேனாதிராஜா ஆகியோரின் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கண்ணியம் மற்றும் நீதி நிறைந்த வாழ்க்கைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினேன்.

எனது வருகையின் போது தொடங்கப்பட்ட பல திட்டங்கள் மற்றும் முயற்சிகள் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் உறுதித்தன்மை தொடர்பில் நேற்றைய எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் பிரத்தியேகமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version