Home இந்தியா நேரு – இந்திரா காந்தியை கடுமையாக சாடிய மோடி : வெடித்த சர்ச்சை

நேரு – இந்திரா காந்தியை கடுமையாக சாடிய மோடி : வெடித்த சர்ச்சை

0

இந்தியாவின் (India) அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவரச சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது எனவும், அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியை போல அழித்தது வேறு யாரும் அல்ல என்றும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (14) நடந்த இந்திய நாடாளுமன்ற அமர்வில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளது.

வெடித்த சர்ச்சை

தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்திரா காந்தி இவற்றை நடைமுறைப்படுத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத போதுதான் வழங்கப்பட்டது.

நேரு முதல் ராஜீவ் காந்தி வரை இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தவர்கள், இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மிக நீண்ட கடிதங்களை எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு

நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியவர்கள் காங்கிரஸ் கட்சியினர் அத்தோடு வாக்கு வங்கி அரசியலுக்காக பட்டியலின, பழங்குடியின மக்களை காங்கிரஸ் வஞ்சித்தது.

மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் மிக நீண்ட விவாகதங்களை நடத்தினார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version