Home இலங்கை பொருளாதாரம் அரசாங்கம் அச்சடித்துள்ள பணம்.. அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்கம் அச்சடித்துள்ள பணம்.. அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

0

அரசாங்கம் அதிகளவான பணம் அச்சடித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில, “நாட்டில் சாதாரணமாக, பணம் புழக்கத்திற்கு மத்திய வங்கியால் வெளியிடப்படும். அவ்வாறான ஒரு செயற்பாடே நடைபெறுகிறது.

அரசாங்கம் எக்காரணம் கொண்டும் பணம் அச்சடிக்கவில்லை.
கடந்த அரசாங்கத்தால் பணம் அச்சடித்து அதிகமாக செலவளித்தமையே நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க காரணமானது.

அதை எமது அரசாங்கம் செய்வதற்கு எப்போதும் முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கையாகவே நாம் இவ்வாறான பிரச்சினைகளை நோக்கிறோம்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version