Home இலங்கை சமூகம் சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் – விளையாடிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு

சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம் – விளையாடிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு

0

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபத்வெவ பிரதேசத்தில் முன்பள்ளியின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது மரக்கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானையை சேர்ந்த 5 வயதான நெஸது துலாஷ் பெரேரா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் உயிரிழப்பு

கடந்த 12ஆம் திகதி முன்பள்ளியில் கற்கும் சிறுவன் பாடசாலை முடிந்து விளையாடிக் கொண்டிருந்த போது மரத்தின் கிளை முறிந்து விழுந்துதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version