Home இலங்கை அரசியல் பரீட்சைகளில் நாமல் செய்த மோசடி! சபையில் அம்பலம்

பரீட்சைகளில் நாமல் செய்த மோசடி! சபையில் அம்பலம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) முழு அரசியல் பலத்தைப் பயன்படுத்தி சட்டத்தரணியானார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) நாடாளுமன்றில் உரையாற்றிய போது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிள்ளைகளின் கல்வியை முடக்கியவர்கள் 

நாமல் ராஜபக்ச, குளிரூட்டப்பட்ட அறையில் பரீட்சை எழுதியதாகவும், பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியே வழங்கப்பட்டதாகவும் இணைய வசதியுடன் கூடிய கணனி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாய், தந்தைக்கு தங்களது பிள்ளைக்கு பென்சில் ஒன்றை வாங்கிக் கொடுக்க முடியாத அளவிற்கு பொருளாதாரத்தை சீரழித்து பிள்ளைகளின் கல்வியை முடக்கியவர்கள் இன்று கல்வித் தகைமை பற்றி பேசுகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் ஒருவர் தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து எங்களிடம் கூறினார்.

நாமல் ராஜபக்ச சட்டத்தரணி பரீட்சை எழுதிய போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தற்பொழுது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டால் எந்த நேரத்திலும் இலங்கை திரும்ப தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011ம் ஆண்டில் முதுமாணி பட்டம் பெற்றுக்கொள்ள நாமல் முயற்சித்த போதும் அதற்கு பல்கலைக்கழகம் இடமளிக்கவில்லை என வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version