Home இலங்கை பொருளாதாரம் எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

0

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுநாள் (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் 5ஆம் திகதி எரிவாயு விலைகள் திருத்தி அமைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

மாதாந்திர எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எரிவாயு விலை

இதன்படி இறுதி அறிக்கை நாளை மறுநாள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கு ஏற்ப இந்த ஆண்டு எரிவாயு விலைகளைத் திருத்தியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலையைத் திருத்தி அமைக்காதிருக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/monthly-gas-price-revision-1780389015

NO COMMENTS

Exit mobile version