Home இலங்கை அரசியல் முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

0

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல்
ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு
மாவட்ட செயலகத்தில் இன்று (17.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

வாக்களிப்பு நிலையங்கள்

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி
தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க
ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.

குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி
இடம்பெற இருக்கின்றது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள்
நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500
பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள். 

137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி
மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே
அமைக்கப்பட்டிருக்கின்ற 8 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு
இடம்பெற இருக்கின்றது.

தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை
கொண்டுவருதல் வேண்டும். இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி
வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் என்றும் குறி்ப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version