திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் மோட்டார்
குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் குண்டு இன்றைய தினம் (03) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை ஆரம்பம்
மட்டக்களப்பு பிரதான வீதி பெரியபாலம் மூதூர் என்ற முகவரியில் வசித்து வரும்
என்.எம்.எம்.நிமாஸ் அஹமட் என்பவருடைய காணியிலிருந்த குறித்த மோட்டார் குண்டு மழை காரணமாக ஏற்பட்ட மண்ணரிப்பினால் தென்பட்டுள்ளது.
இது தொடர்பில் மூதூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மூதூர் பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
