Home முக்கியச் செய்திகள் விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

0

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றில் முன்னிலை

​​அந்த வழக்கின் முறைப்பாட்டாளரான விஜித ஹேரத் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகிருந்தார்.

அதன்போது, ​​விஜித ஹேரத் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து, தனது கட்சிக்காரர் இன்று அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதால் சாட்சியமளிப்பதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம், விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்க மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

2010ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் விளம்பர நடவடிக்கைகளில் தனியார் நிறுவனமொன்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தினால் அரசாங்கத்திற்கு 64 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version