புதிய அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட ஊழியர்களாக நியமிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) தெரிவித்துள்ளார்.
கம்பகாவில்(gampaha) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) மகளிர் பிரிவு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எம்.பிக்களுக்கான வசதிகள் மட்டுப்படுத்தப்படும்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள் உட்பட வசதிகள் மட்டுப்படுத்தப்படும்.
ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும் இது உதவியாக அமையும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் நலனே முக்கியம்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன்களைக் காட்டிலும் நாட்டின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட தேசியக் கொள்கையைக் கடைப்பிடித்து, நாட்டின் எதிர்காலத்திற்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.