Home இலங்கை அரசியல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவுள்ள முஜிபுர் ரஹ்மான்!

விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவுள்ள முஜிபுர் ரஹ்மான்!

0

சிவப்பு முத்திரைக் கொண்ட கொள்கலன்களை விடுவித்த ஊழல் குறித்து வாக்குமூலம்
ஒன்றை பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நாடாளுமன்ற
உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குமூலம்

குற்றப்புலனாய்வு திணைக்களம், தனது முகவரியை நாடாளுமன்றத்திடம்
கேட்டுள்ளதாகவும், எனவே அந்த திணைக்களம் தம்மை விசாரணைக்கு அழைக்கும் என்றும்
ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக, விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை தாம் தாக்கல் செய்த பிறகு,
கொள்கலன் விவகாரம் தொடர்பாக விசாரிக்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தமது
வாக்குமூலத்தை எதிர்பார்க்கிறது என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version