பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பொறுப்பேற்றவுடன் நாட்டில் நிலவிய
குற்றச் செயல்கள் மறைந்துவிட்டன என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க
தெரிவித்துள்ளார்.
தேசபந்துவால் பாதாள உலகத்திற்கு எதிரான ஒரு பாரிய நடவடிக்கை
தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்து கருத்துரைத்த திஸாநாயக்க, பாதாள உலக
நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம், நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்
என்றும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடு
பாதாள உலகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாட்டில் வளர்ச்சி நடவடிக்கைகள்
தடைபடும் என்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யத்
தயங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
